By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
    ‘மௌனம் சம்மதம்’ என்ற விதிக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்
    1 Min Read
    அமெரிக்காவின் ‘எச்-1பி’ விசா விண்ணப்பங்கள் 38% சரிவு: டிரம்ப் அரசின் கடுமையான விதிகளே காரணம்
    1 Min Read
    “மகனின் திருமணத்தில் கலந்து கொள்வது கடினம்” – ஈரான் போர் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை
    1 Min Read
    இனி ‘விசா’ கட்டாயம்: 60 நாட்கள் இலவச தங்கும் அனுமதியை ரத்து செய்த தாய்லாந்து அரசு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    30 வயதிற்கு பின் பெண்களை தாக்கும் நோய்
    2 Min Read
    பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக ’ஹெல்த் மிக்ஸ்’ கொடுக்கலாமா?
    1 Min Read
    வினேஷ் போகத் பங்கேற்கத் தடை இல்லை: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    1 Min Read
    தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தவெக முதல்முறையாக தடம் பதிக்கும் வாய்ப்பு!
    2 Min Read
    திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அனைத்து பாகங்களிலும் அற்புத மருத்துவகுணம் கொண்ட சங்குப்பூ
    1 Min Read
    பற்களை பாதுகாக்கும் எளிய இயற்கை வழிமுறை உங்களுக்காக!!!
    1 Min Read
    நல்ல தூக்கத்தை அளிக்கும் மருதாணி பூக்கள்
    1 Min Read
    கொசு, பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்க வேம்பை இப்படி பயன்படுத்துங்க!
    1 Min Read
    பிளஸ்-2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை
    3 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ட்ரம்ப்பின் புதிய வரிமுறையால் இந்திய ஏற்றுமதி பாதிக்குமா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > ட்ரம்ப்பின் புதிய வரிமுறையால் இந்திய ஏற்றுமதி பாதிக்குமா?
இந்தியாஉலகம்வர்த்தகம்

ட்ரம்ப்பின் புதிய வரிமுறையால் இந்திய ஏற்றுமதி பாதிக்குமா?

admin
Last updated: February 15, 2025 11:04 pm
By admin 2 Min Read
Share
SHARE

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகளவில் வர்த்தக சமநிலையை ஏற்படுத்தும் வகையில் “Reciprocal Tariff” எனும் புதிய வரிமுறையை அமல்படுத்த முடிவெடுத்துள்ளார். இதன் அடிப்படையில், எந்த நாடு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கிறதோ, அதே நாடு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்காவும் அதே அளவிலான வரியை விதிக்கும். இந்த முடிவு இந்தியாவை நேரடியாக பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் டொனால்ட் ட்ரம்ப் சந்திக்க இருக்கின்ற நிலையிலேயே இந்த முக்கியமான அறிவிப்பு வெளியானது. இந்தியாவிற்கு இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் பலவகையாக உள்ளன. உணவுப் பொருட்கள், ஆடைகள், மின் உபகரணங்கள், ரத்தினக் கற்கள், நகைகள், மருந்துகள், இரும்பு மற்றும் ஸ்டீல் போன்ற முக்கிய பொருட்கள் இதில் அடங்கும்.

இந்த புதிய வரிமுறை அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் இந்திய பொருட்களின் விலை அதிகரிக்கும். இதனால் அமெரிக்க நுகர்வோர் இந்திய பொருட்களை வாங்காமல், குறைந்த விலையிலான பிற substitute பொருட்களை தேர்வு செய்யலாம். இதனால் இந்திய ஏற்றுமதி குறையும், இந்திய உற்பத்தியாளர்களின் வருவாய் பாதிக்கப்படும். குறிப்பாக, ஏற்றுமதியாளர்கள் வருமான இழப்பு அடைந்தால், பல தொழிலாளர்கள் வேலையிழப்பில் சிக்குவார்கள்.

இந்திய பொருட்கள் அமெரிக்க சந்தையில் குறைந்த வரி விதிப்புடன் இருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார். எடுத்துக்காட்டாக, இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு 9.5% வரி விதிக்கிறது, ஆனால் அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு வெறும் 3% மட்டுமே வரி விதிக்கிறது. இதனால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இதை சமன் செய்ய, இந்தியா தனது வரியை குறைக்க வேண்டும் அல்லது அமெரிக்காவிற்கு அதிக வரி செலுத்த வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்த மாற்றத்தால் ஏற்பட்ட விளைவுகளை குறைக்க, இந்திய அரசு ஏற்கனவே சில முக்கிய முடிவுகளை பரிசீலித்து வருகிறது. 30-க்கும் மேற்பட்ட அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் வரியை குறைப்பது பற்றியும், எரிசக்தி பொருட்களின் இறக்குமதி வரியை அதிகரிப்பது பற்றியும் ஆலோசிக்கிறது.

மேலும், ட்ரம்ப் இந்திய நிறுவனங்களுக்கு ஒரு மாற்று தீர்வையும் வழங்கியுள்ளார். இந்தியாவில் இருந்து நேரடியாக ஏற்றுமதி செய்வதை தவிர்த்து, அமெரிக்காவில் தொழிற்சாலைகள் அமைத்து தயாரிப்பு செய்யலாம் என அவர் கூறியுள்ளார். இது அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதே அவரின் நோக்கம். ஆனால், இது இந்திய நிறுவனங்களுக்குப் பெரிய சவாலாக இருக்கலாம்.

 

இந்த புதிய வரிமுறை அமலுக்கு வந்தால், இந்திய பொருளாதாரம் பெரிய தாக்கம் அடைய வாய்ப்புள்ளது. ஏற்றுமதி குறைந்தால், தொழில் மற்றும் வணிகத் துறைகள் கடுமையாக பாதிக்கப்படும். அதே நேரத்தில், அமெரிக்க நுகர்வோர் இந்திய பொருட்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலையும் உருவாகும்.

தற்போது, இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவுகள் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த Reciprocal Tariff இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை எப்படி மாற்றும் என்பதற்காக தொழில்சார்ந்த வல்லுநர்கள் தீவிரமாக கணிக்கின்றனர்.

You Might Also Like

என்னை 100% நம்பலாம்” – பிரதமர் மோடி குறித்து அதிபர் ட்ரம்ப் நெகிழ்ச்சி

இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது

30 வயதிற்கு பின் பெண்களை தாக்கும் நோய்

பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக ’ஹெல்த் மிக்ஸ்’ கொடுக்கலாமா?

வினேஷ் போகத் பங்கேற்கத் தடை இல்லை: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

TAGGED:New TaxationReciprocal Tariffஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடிடொனால்ட் ட்ரம்ப்புதிய வரிவிதிப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

அன்று சொன்ன ஸ்டாலின், இன்று பேசுவது வேறு” – சண்முகம் விமர்சனம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?