மும்பை: இந்திய ஊடகங்கள் உலகளவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா வளாகத்தில் நடைபெற்ற ஐஎன்எஸ் (இந்திய செய்தித்தாள் சங்கம்) கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மேலும் பேசியதாவது: இந்திய ஊடகங்கள் தனது உலக செல்வாக்கை விரிவுபடுத்தும் வகையில் செயல்பட வேண்டும். ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மொழிகளுக்கு சமூக ஊடகங்கள்.
வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் செய்தித்தாள்களின் பங்கு முக்கியமானது. நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது ஊடகங்களின் வேலையல்ல. அவர்களின் முதன்மையான பொறுப்பு மாற்றத்தை கொண்டு வருவதும், வழிகாட்டுவதும் ஆகும்.
மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் சொந்த திறன்களை வெளி உலகிற்கு எடுத்துரைக்கும் பணியை ஊடகங்கள் செய்து வருகின்றன. டிஜிட்டல் இந்தியா போன்ற அரசின் முயற்சிகளை ஊக்குவிப்பதில் ஊடகங்களின் பங்கு பாராட்டத்தக்கது.
இன்று இந்திய குடிமக்கள் தங்கள் திறன்களில் நம்பிக்கையுடன் புதிய உயரங்களை எட்டத் தொடங்கியுள்ளனர். அரசியலமைப்பின் 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் போது, அனைத்து குடிமக்களும் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும். அதற்கு அவர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்திய செய்தித்தாள் சங்கம் 1939 இல் தொடங்கப்பட்டது. சங்கம் மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா வளாகத்தில் 1.25 லட்சம் சதுர அடியில் புதிதாக கட்டப்பட்ட 14 மாடி அடுக்குமாடி கட்டிடத்தில் பல செய்தித்தாள் அலுவலகங்களைக் கட்டியுள்ளது. ஐஎன்எஸ் சங்கத்தில் 800 உறுப்பினர்கள் உள்ளனர்.