புது டெல்லி: ஸ்வச் சர்வேக்ஷன் திட்டத்தின் கீழ், இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல் 2016 முதல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, 2024-25-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
நாட்டின் தூய்மையான நகரங்களில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் 8-வது முறையாக முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, குஜராத்தில் உள்ள சூரத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நவி மும்பை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.

அதைத் தொடர்ந்து, 3-10 லட்சம் மக்கள் தொகை பிரிவில் உ.பி.யில் உள்ள நொய்டா முதலிடத்தில் உள்ளது. சண்டிகர் யூனியன் பிரதேசம் இரண்டாவது இடத்தையும், கர்நாடகாவில் உள்ள மைசூர் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
நேற்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 78 விருதுகளை அவர் வழங்கினார்.