இந்தியாவின் நிதி அமைப்பு, விரைவான பொருளாதார வளர்ச்சியால் உந்தப்பட்டு, மேலும் மீள்தன்மை மற்றும் பன்முகத்தன்மை கொண்டது. 2010-களின் உலகளாவிய மந்தநிலையிலிருந்து மீண்ட பிறகு 2020-ல் இந்திய நிதி அமைப்பு கோவிட் நெருக்கடியை எதிர்கொண்டது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் சந்தை நிதியுதவி வளர்ந்துள்ளது.

இதில் பொதுத்துறை நிதி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. பலவீனமான நிலைமைகள் இருந்தபோதிலும், பெரிய கடன் வழங்குநர்கள் சிறிய அதிர்ச்சிகளை எதிர்கொள்கின்றனர். வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் அதற்கான மூலதனம் போதுமானது.
இருப்பினும், பல வங்கிகள், குறிப்பாக பொதுத்துறை வங்கிகள், இத்தகைய சூழ்நிலைகளில் கடன் வழங்குவதற்கு தங்கள் மூலதனத் தளத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு ஐஎம்எப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.