புதுடெல்லி: எதிர்காலத்தில் இந்தியாவில் எரிபொருள் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் அதே தேவை அதிகரிக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா சீனாவை விஞ்சி, இப்போது முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது.
குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தேவை அதிகரிக்கும் என சர்வதேச எரிபொருள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆய்வு எதிர்கால பண்புகளை முன்னறிவிக்கிறது.
உலக அளவில் நிலக்கரியைப் பயன்படுத்தும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2019-2020ல் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி 71 சதவீதமாக இருந்தது, தற்போது 2023-24ல் 75 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நடுத்தர காலத்தில், எரிபொருள் உற்பத்தியில் நிலக்கரியின் முக்கியத்துவம் குறைய வாய்ப்புள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் புதிய நிலக்கரி மின் நிலையங்கள் 60 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், 2070ல் பூஜ்ஜிய மாசு என்ற இலக்கை எட்ட முடியும் என நம்பப்படுகிறது.2035ல், தினமும், 12,000 புதிய கார்கள் சந்தைக்கு வரும் என்றும், ஸ்டீல் உற்பத்தி 70 சதவீதமும், சிமென்ட் விற்பனை 55 சதவீதமும் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. .
மேலும், ஏசிகள் 4.5 மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் மின்சாரத் தேவை பெருமளவு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் எரிபொருள் தேவை 35 சதவீதம் அதிகரிக்கும் என்றும், 2035ஆம் ஆண்டுக்குள் மின் உற்பத்தி 1,400 ஜிகாவாட்டை எட்டும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.