திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலுடன் சபரிமலை சென்ற திருவல்லா போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீர் நடவடிக்கையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகர் மோகன்லால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரட்டை வேடத்துடன் சபரிமலைக்கு வருகை தந்தார். அப்போது சபரிமலையில் நடிகர் மம்முட்டிக்கு சிறப்பு பூஜையும் செய்தார்.

மோகன்லால் சபரிமலைக்கு சென்றபோது அவருடன் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா போலீஸ் இன்ஸ்பெக்டரும் சென்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் சுனில் கிருஷ்ணன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் நடிகர் மோகன்லாலுடன் சபரிமலை சென்றதே இந்த இடமாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவரிடம் விளக்கம் கேட்டு பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி வினோத்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.