டெல்லியில் கெஜ்ரிவால் வசித்து வந்த சொகுசு பங்களாவின் கட்டுமானம் விதிகளை மீறியதா என்பது குறித்து விரிவான விசாரணைக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) உத்தரவிட்டுள்ளது. டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் இருந்தபோது, சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் வசித்து வந்தார்.
இந்த பங்களா ரூ.45 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டதாக பாஜக ஆரம்பத்தில் குற்றம் சாட்டியது. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்த பிறகு, பாஜகவின் முதல்வர் வேட்பாளர் இந்த பங்களாவில் வசிக்க மாட்டார் என்று அக்கட்சி அறிவித்தது.
இந்த பங்களா கட்டுமானத்தில் முறைகேடுகள் நடந்ததாக டெல்லி பாஜக தலைவர் மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார். அதன் பிறகு, மத்திய பொதுப்பணித் துறையின் அறிக்கையைத் தொடர்ந்து, CVC இந்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த பங்களா விதிகளின்படி கட்டப்பட்டதா என்பதை விசாரித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.