இந்திய விண்வெளி மையத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்பு அவசியம் என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயிலசாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கோவை கிணத்துக்கடவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் STEM புத்தாக்கம் மற்றும் கற்றல் மையம் திறக்கப்பட்டது. இதனை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரையும் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிலவில் தண்ணீர் இருப்பதாகவும், அது மெதுவாக துருவப் பகுதியில் இறங்கும் என்றும் உலகிற்கு இஸ்ரோ காட்டியது. உலக நாடுகள் அனைத்தும் நிலவில் குடியிருப்பு கட்ட முடியுமா? சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்க முடியுமா? ஆய்வு செய்து வருகின்றனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து செயற்கைகோள்களை தயாரித்தால் அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு கடினமாக இருக்கும். எனவே செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகளை அவுட்சோர்ஸ் செய்யலாம். இதன் மூலம் இந்தியா போன்ற நாடுகளுக்கு செயற்கைக்கோள்களை தயாரித்து வழங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கும். ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் வணிக வாய்ப்புகள் உருவாகும்.