புதுடில்லி: ‘இந்தியா-இங்கிலாந்து உறவில் மகத்தான ஆற்றல் உள்ளது’ என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பொருளாதாரம்
அப்போது டேவிட் லாம்மி கூறியதாவது: உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.
உறவு
உலகளாவிய பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவும் இங்கிலாந்தும் இணைந்து செயல்படுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று ஜெய்சங்கர் கூறினார்.