இந்தியா – பாகிஸ்தான் போர் மே 10 அன்று நிறைவடைந்தது. அப்போரைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி செக்டார் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே கடும் துப்பாக்கிச்சண்டை வெடித்தது. இச்சம்பவத்தில் நம் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள், ராணுவ மற்றும் விமானப்படை தளங்களை அழித்தது. இதனால் தாங்க முடியாமல் போர் நிறுத்தம் கேட்ட பாகிஸ்தான், மே 10 அன்று சரணடைந்தது. போர் நிறுத்தம் அமலாகினாலும், பாகிஸ்தான் அமைதியாக இருக்காது என இந்தியா எச்சரித்தது.
நேற்று இரவு, வழக்கமான ரோந்து பணியில் இருந்த இந்திய வீரர்கள், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற ஒருவரைக் கண்டுபிடித்தனர். அவரை தடுக்க முயன்றபோது பாகிஸ்தான் ராணுவம் நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தியது. பதிலுக்கு இந்திய வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நீடித்தது.
காலநிலை மோசமாக இருந்ததால் ஊடுருவ முயன்ற நபர் மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பி சென்றார். ஆனால் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நம் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் எல்லைப் பகுதி மீண்டும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளது.