புதுடெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட நகைகளை மீட்டுத் தரக் கோரிய அவரது அண்ணன் மகள்கள் ஜெ.தீபா, தீபக் ஆகியோரின் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றமும், கர்நாடக உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.

இந்நிலையில், ஜெ.தீபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சத்யகுமார், உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், “மறைந்த அத்தை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மறைந்த அத்தையின் நகைகளை கேட்கிறார். அதற்கு அவருக்கு உரிமை உள்ளது. இந்த வழக்கின் உண்மை நிலவரத்தை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து, தீபாவுக்கு நகைகளை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்.