ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் 2024 இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளும் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட டிஜிபி அனுராக் குப்தாவை பதவி நீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவும், காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் உள்ளன. ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். 81 தொகுதிகளைக் கொண்ட இந்தத் தேர்தலில் ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்க 42 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.தற்போது, காங்கிரஸும், ஜார்கண்ட் முக்தி மோர்சாவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், பா.ஜ., தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில் டிஜிபி அனுராக் குப்தா ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. புகாரை அடுத்து, அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அனுராக் குப்தா 1990 இல் ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார், தேர்தல் நேரத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது, சிறப்பு பிரிவு ஏடிஜிபியாக பதவி வகித்து வந்த அவர், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இப்போது ஜார்க்கண்ட் டிஜிபி பொறுப்பை மூத்த டிஜிபி அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலின் சூழலை மேலும் மாற்றியுள்ளது.