பாட்னா: பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்த எதிர்க்கட்சிகளுக்கு பீகார் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா கூறுகையில், “காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் தூண்டப்பட்ட ஒருவரால் பிரதமர் மோடியின் மறைந்த தாயாருக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

பிரதமர் மோடியின் தாயார் குறித்து காங்கிரஸ் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ, அவர்கள் மோசமான மனநிலையைக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக இந்தப் பிரச்சினையை எழுப்பும். பிரதமர் மோடியின் மறைந்த தாயாரைப் பற்றி அவதூறான அறிக்கைகளை வெளியிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பீகார் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.”