ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று அமராவதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஜூன் 1 முதல் புதிய விதிகளுடன் ஆந்திராவில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும். அதன்படி, 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் நேரடியாக விநியோகிக்கப்படும். இப்போது ரேஷன் பொருட்கள் மாதத்தின் 1 முதல் 15-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ரேஷன் கடைகள் விநியோகிக்கப்படும்.

முந்தைய ஜெகன் ஆட்சியின் போது ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தன, மாநிலம் முழுவதும் ரேஷன் விநியோக வாகனங்கள் ரூ.1600 கோடி செலவில் இயக்கப்பட்டன. இவை மாதத்திற்கு 2 நாட்கள் மட்டுமே இயங்கின. இதன் காரணமாக, அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை. ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது, விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.