பெங்களூரு: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உத்தவ் மற்றும் சரத் பவார் கட்சிகளிடம் இருந்து தனக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என கர்நாடக உள்துறை அமைச்சரும், மகாராஷ்டிர தேர்தல் பொறுப்பாளருமான பரமேஷ்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் மகாயுதி கூட்டணி 233 இடங்களிலும், மகா விகாஸ் அகாடி கூட்டணி 49 இடங்களிலும் வெற்றி பெற்றது.
பரமேஷ்வர் கூறுகையில், “பல இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சிவசேனா-உத்தவ் அணி முழு ஒத்துழைப்பு தேவை. ஆனால் அது கிடைக்கவில்லை. அதேபோல் உத்தவ் அணிக்கு காங்கிரஸ் தரப்பிலும் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. தேசியவாத காங்கிரஸ்-சரத் பவார் அணியும் இதேபோன்று செயல்படவில்லை,” என்றார்.
காங்கிரஸ் கட்சி, 105 இடங்களில் போட்டியிட்டாலும், 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, எதிர்பார்த்த 70 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை. 50க்கும் மேற்பட்ட இடங்களை தாங்கள் எதிர்பார்த்ததாகவும், ஆனால் அது கிடைக்கவில்லை என்றும் பரமேஸ்வர் குறிப்பிட்டார்.