திருவனந்தபுரம்: கேரளாவில், வயநாடு, இடுக்கி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் யானைகள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்ற வன விலங்குகள் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்கியதால் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கிராமங்களுக்குள் நுழைந்து பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காட்டு விலங்குகளைக் கொல்ல அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, 1972-ம் ஆண்டு மத்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த அவசரச் சட்டத்தை அமல்படுத்த முடியும்.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், கலெக்டர் அல்லது தலைமை வன அதிகாரியின் உத்தரவின் பேரில் வன விலங்குகளை சுட முடியும்.