சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்தார். நேற்று காலை சென்னை வந்த பினராயி விஜயன் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு இதயம் தொடர்பான இசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகளும், ரத்தப் பரிசோதனையும் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
நேற்று மதியம் அப்பல்லோவில் இருந்து புறப்பட்ட அவர், உடல்நிலை சீராக இருப்பதாக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பினராயி விஜயன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.