கேரளா: சாலை விபத்தில் கேரள பாடகர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் பாடப்படும் முஸ்லிம் நாட்டுப்புற பாடல்களை அடிப்படையாக கொண்டது மாப்பிளாப்பாட்டு பாடல். இப்பாடலை பாடி புகழ்பெற்றவர் பைஜாஸ் உலியில்.
புன்னாட்டில் காரில் அவர் நேற்றிரவு பயணித்தபோது, எதிரே வந்த காரில் மோதி விபத்தில் சிக்கினார். இதில் காயமடைந்த பைஜாஸ் உலியில், ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் 5 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் கேரளா பாடகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.