திருப்பதி: திருப்பதியில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பராமரிப்பில், 5,000-க்கும் மேற்பட்ட பசுக்கள் வளர்க்கப்படும் மாட்டு தொழுவம் உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், “தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, திருப்பதி மாட்டுத் தொழுவத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்களும், கன்றுகளும் சரியான தீவனம் கிடைக்காமல் இறந்துள்ளன” என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திருப்பதி எம்எல்ஏவும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவருமான கருணாகர் ரெட்டி குற்றம் சாட்டினார்.
ஆனால், அதற்கு பதிலளித்த தேவஸ்தானம், “கருணாகர் ரெட்டி கூறியது போல், கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் இறக்கவில்லை. இந்நிலையில் திருப்பதி எம்பி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குருமூர்த்தி, முன்னாள் துணை முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் ரோஜா உள்ளிட்டோர் நேற்று கருணாகர் ரெட்டி வீட்டில் குவிந்தனர். மாட்டுத்தாவணிக்கு பாத யாத்திரை சென்றனர்.

அப்போது, திருப்பதி எம்எல்ஏ ஆரணி சீனிவாசலு, சந்திரகிரி எம்எல்ஏ நானி, பூதலப்பட்டு எம்எல்ஏ முரளி, ஸ்ரீகாளஹஸ்தி எம்எல்ஏ பொஜ்ஜல வெங்கட கதிர், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி உள்பட பலர் மாட்டுத்தொழுவத்தை பார்வையிட்டனர். கருணாகர் ரெட்டி கூறுகையில், பராமரிப்பு இல்லாமல் 3 மாதங்களில் நூற்றுக்கணக்கான மாடுகள் இறக்கவில்லை. போதுமான தீவனம் நிலுவையில் உள்ளது. சுற்றுப்புறமும் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. மாடுகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன. கருணாகர் ரெட்டியை இப்போது நேரில் வந்தால் மாட்டுத் தொழுவத்தின் நிலையைக் காட்டுவோம் என்று கூறி அழைத்தனர்.
கருணாகர் ரெட்டியையும் நேரடியாக போனில் அழைத்தனர். கருணாகர் ரெட்டியும் தனது ஆதரவாளர்களுடன் மாட்டு தொழுவத்திற்கு செல்ல முயன்றார். ஆனால், பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் கருணாகர் ரெட்டி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி தனது வீட்டின் முன் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். கோசாலையை விட்டு கூட்டணி கட்சியினர் வெளியேறிய பிறகே மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என திருப்பதி எஸ்பி ஹர்ஷவர்தன் உத்தரவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.