மகாராஷ்டிரா அரசு தொழிலாளர் சட்டங்களில் முக்கியமான மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் தினசரி வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்தலாம். முதலீடுகளை ஈர்க்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கர்நாடகா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், திரிபுரா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே இந்த விதிமுறை அமலில் உள்ளது. இப்போது மகாராஷ்டிராவும் அதே பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.
புதிய சட்ட மாற்றங்களின்படி தொழிற்சாலைகளில் தினமும் அதிகபட்சம் 12 மணி நேரம் வரை வேலை செய்யலாம். ஆனால் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை ஓய்வு வழங்கப்பட வேண்டும். Overtime வேலைக்கான சட்ட வரம்பு 115 மணி நேரத்திலிருந்து 144 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வார வேலை நேரமும் 10.5 மணிநேரத்திலிருந்து 12 மணிநேரமாக உயர்த்தப்படும். இதற்கான எழுத்துப்பூர்வ சம்மதம் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்.
20க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு இந்த புதிய சட்டங்கள் பொருந்தும். சிறிய நிறுவனங்கள் பதிவு சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அதிகாரிகளுக்கு எளிய தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு கூறியதாவது, “தொழிலாளர்களுக்கு சரியான overtime ஊதியம் கிடைக்கும், பெண்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும், வேலை சூழல் மேம்படும்”. தொழிலாளர் துறை தெரிவித்தபடி, இந்த மாற்றங்கள் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இடையேயான நீண்டநாள் சிக்கல்களை தீர்க்கும்.