ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில் நேற்று முன் தினம் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு வருவாய்த்துறை அமைச்சர் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் சகினா இட்டு அளித்த பதில் வருமாறு:- ஜம்மு காஷ்மீரில் 2,15,905 ஏக்கர் அரசு நிலம் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளது. இதில் 1,92,457 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டுள்ளது. 39,205 ஏக்கர் நிலம் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

இதன் மதிப்பிடப்பட்ட மதிப்பு ரூ.18,050 கோடி ஆகும். இந்த நிலங்களை மீட்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலத்தில் இருந்து தலா 1,360 சதுர அடி நிலமற்ற குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. தொழிற்பேட்டைகளுக்காக அரசு நிலம் எதுவும் தனியாருக்கு மாற்றப்படவில்லை. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் தொழில் மற்றும் வணிகவரித் துறையின் கோரிக்கைக்கு இணங்க பல்வேறு மாவட்டங்களில் சுமார் 1,500 ஏக்கர் நிலங்கள் துறைக்கு மாற்றப்பட்டுள்ளன. அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.