பாஜக கூட்டணியில் உள்ள லோக்ஜன சக்தி (ராம்விலாஸ் பாஸ்வான்) ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ஜார்க்கண்டில் 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக்ஜன சக்தி (ராம்விலாஸ் பாஸ்வான்) கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. லோக்ஜன சக்தி (ராம் விலாஸ் பாஸ்வான்) கட்சியின் தலைவரும், மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சருமான சிராக் பாஸ்வான் நேற்று ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “லோக்ஜனா சக்தி (ராம் விலாஸ் பாஸ்வான்) ஜார்கண்டில் வலுவான தளத்தைக் கொண்டுள்ளது. இதனால் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளோம். இதுகுறித்து கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசித்து வருகிறோம்,” என்றார்.