போபால்: மத்தியப் பிரதேசம் – போபாலில் சாலைகள், போக்குவரத்து சிக்னல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், போதைப்பொருள் கடத்தலுக்கும் காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உத்தரவை போபால் மாவட்ட ஆட்சியர் கவுஷ்லேந்திர விக்ரம் சிங் திங்கள்கிழமை பிறப்பித்தார். பாரதிய நாகரிக் சுரக்ஷா சங்கிதா சட்டத்தின் 163 (2) பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், போபால் கோலார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சமூக நல மையத்தை பயன்படுத்தி, பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவர்களை தங்க வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் பிச்சை எடுப்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.