மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக பாஜக தனது வாக்குறுதி திட்டங்களை இன்று அறிவித்துள்ளது. மும்பையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பாஜக வாக்குறுதியில் பெண்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, வறட்சி இல்லாத மகாராஷ்டிரா மாநிலத்தை உருவாக்குவதற்கான திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த தேர்தலில் மொத்தம் 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ள ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது