புதுடெல்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் பேசும்போது மைக்ரோஃபோன் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதில் உண்மையில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் பேச்சை கேட்டோம். ஒவ்வொரு தமுதல்வருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது திரையில் ஒளிபரப்பப்பட்டது. மைக் அணைக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறியது முற்றிலும் தவறானது.
ஒவ்வொரு முதலமைச்சருக்கும் பேச உரிய நேரம் வழங்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மைக் அணைக்கப்பட்டுள்ளது என்றார். அது உண்மை இல்லை. மீண்டும் பொய் கதையை உருவாக்காமல் உண்மையை பேச வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.