புதுடெல்லி: வியாழனன்று, மேற்கு வங்காள முதல்வரும், டிஎம்சி தலைவருமான மம்தா பானர்ஜியும் X இல் பதிவிட்டிருந்தார், ஆயுள் மற்றும் உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்கள் மீதான இந்த ஜிஎஸ்டி திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோரி, மேலும் அரசாங்கம் கவனம் செலுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
ஆயுள் காப்பீடு, உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டி திரும்பப் பெறப்படும். வரி விதிப்பால் சாமானியர்களின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறினார். இதுகுறித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதம்: ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீட்டு பிரீமியத்தில் விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும். என்னைப் பொறுத்தவரை வரி விதிப்பு என்பது மக்களுக்கு செய்யும் துரோகம்.
வரி விதிப்பு சாமானிய மக்களின் நிதிச்சுமையை அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு மம்தா கூறியுள்ளார். முன்னதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஆயுள் காப்பீடு மற்றும் உடல்நலக் காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தினார்.