கொல்கத்தா: தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அரசு நிலையான அரசு அல்ல என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தர்மதாலாவில் நடைபெற்ற தியாகிகள் தின பேரணியில் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். திரளான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது பலத்த மழை பெய்தது. பேரணியில் மழையில் நனைந்த மம்தா பானர்ஜி பேசியதாவது:
38 சதவீதம்
38 சதவீத பெண் எம்.பி.க்களை கொண்ட ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ் தான். அரசியலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பு பலர் கூறினர். ஆனால் அதைச் செய்ய முடியவில்லை. 38 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்தை பெற்ற ஒரே கட்சி நாங்கள்தான். தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அரசு நிலையான அரசு அல்ல.
விரைவில் விழும்
மத்தியில் பாஜக ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது. இது நிலையான அரசு அல்ல. விரைவில் விழும். வெட்கக்கேடான அரசு, சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளையும், பிற அமலாக்க முறைகளையும் தவறாகப் பயன்படுத்தி ஆட்சியைத் தொடர்கிறது. விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி எங்களை ஏமாற்ற முடியாது. மேற்கு வங்கம் இல்லாமல் இந்தியா இருக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.