கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில், கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:-
மேற்கு வங்கத்தில் நாடு முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட குழுக்களை பாஜக நிறுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கும் நோக்கத்துடன் கணக்கீடுகளை மேற்கொண்டு வருகிறது.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும். உங்களிடம் ஆதார் அட்டை இருக்க வேண்டும்.
“நான் உயிருடன் இருக்கும் வரை, மக்களின் வாக்களிக்கும் உரிமையை யாரும் பறிக்க நான் அனுமதிக்க மாட்டேன்” என்று மம்தா கூறினார்.