மாநிலத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மம்தா பானர்ஜி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை இங்கிலாந்து சென்ற அவர் அங்கு தொழிலதிபர்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குணால் கோஷ், தனக்குப் பிடித்த வெள்ளைப் புடவை, செருப்பு, மேலாடை அணிந்து லண்டன் தெருக்களில் நடந்து செல்லும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதேபோல், மம்தா பூங்காவில் நடந்து செல்லும் மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக, இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதர் விக்ரம் துரைசாமி நடத்திய தேநீர் விருந்தில் மம்தா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மேற்கு வங்கம்-இங்கிலாந்து இடையேயான உறவு முன்னெப்போதையும் விட வலுப்பெற்றுள்ளது என்று கூறினார்.