அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் ‘மனா மித்ரா’ என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டு, அதின் மூலம் 200 சேவைகள் வாட்ஸாப் மூலம் வழங்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், 9552300009 என்ற வாட்ஸாப் எண் வழியாக மாநிலம் முழுவதும் அரசு சேவைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம், பொதுவாக தேவையான ஆவணங்களை பெறுதல், கோவில் தரிசனத்துக்கான நேரத்தை தேர்ந்தெடுத்தல், நேரில் செல்லாமலேயே அரசு அலுவலகங்களை தொடர்பு கொள்ளுதல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இதனிடையே, மனா மித்ரா திட்டம் தற்போது 200 சேவைகள் நிறைவேற்றியுள்ளதாக மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் நர லோகேஷ் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். மனா மித்ராவின் வாட்ஸாப் நிர்வாக சேவைகள் இப்போது 200ஐ எட்டியுள்ளன, இது ஆந்திராவில் டிஜிட்டல் நிர்வாகத்தின் சக்தியை காட்டுகிறது. ஆகவே, அனைவரும் இந்த சேவையை பயன்படுத்துங்கள்” என்று கூறினார்.