புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற மிலாத்-இ-நபி ஊர்வலத்தில் ‘ஐ லவ் முகமது’ என்று எழுதப்பட்ட பதாகை ஏந்திச் செல்லப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பரேலியில் வன்முறை வெடித்தது. அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பரேலியில் தற்போது அமைதி நிலவுகிறது. அங்கு எந்த தொந்தரவும் இல்லை. பக்தியின் வெளிப்பாடு தனிப்பட்டதாக இருக்க வேண்டும். தெருக்களில் ஊர்வலமாகச் சென்று அதை வெளிப்படுத்துவது தேவையற்றது.

நபிகள் நாயகத்தின் பெயர் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை மிதிக்கலாம், கிழிக்கலாம், அவமதிக்கலாம். எனவே, அன்பை மனதில் கொள்ள வேண்டும்.
இதேபோல், பிற மதங்களின் பண்டிகைகள் நடைபெறும் போது போராட்ட ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படக்கூடாது. இவ்வாறு மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி கூறினார்.