சென்னை: தரமான பொருட்களை தேடும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி வர்த்தகத்தில் வெற்றிப்படிக்கட்டுளில் ஏறி வருகின்றனர் MINISO பொருட்கள் விற்பனையகம். தரம்தான் எங்களின் தாரக மந்திரம் என்று உடும்புப்பிடியாக கொள்கையில் நழுவாமல் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்ற MINISO விற்பனையகம் இன்று சென்னை கொளத்தூரில் தங்கள் சேவையை தொடங்கி உள்ளனர்.
MINISO என்பது ஒரு சர்வதேச தயாரிப்பு சில்லறை விற்பனையாளர் என்றால் மிகையில்லை. உயர்தர வீட்டுப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை தரத்தில் எவ்வித சமரசமின்றி சரியான விலையில் வழங்கும் நிறுவனம். MINISO, 2013 முதல் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா மற்றும் மெக்சிகோ உட்பட 80 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 4,200 க்கும் மேற்பட்ட கடைகளைத் திறந்து வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்றுள்ளது.
உயர்தர புதிய பொருட்களை வழங்கும் சில்லறை விற்பனை நிறுவனம்தான் MINISO. சிறந்த வாழ்க்கைக்கு விலையுடன் எந்த தொடர்பும் இல்லை என்பது இந்நிறுவனத்தின் கூற்று ஆகும். இந்நிறுவனத்தின் மற்றொரு கிளையை சென்னை கொளத்தூரில் இன்று முதல் திறந்து சேவை செய்ய தொடங்கி உள்ளனர் கார்த்திகேயன், அனுசியா ஆகியோர்.
சென்னை மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள இவர்கள் தங்களின் அடுத்த கிளையை கொளத்தூரில் திறந்து சரியான விலையில் உயர் தரமான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம் என்று வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றனர். சென்னையில் இவர்களின் நிறுவனம் விற்பனை செய்யும் பொருட்கள் வாடிக்கையாளர்களை மீண்டும் தேடி வந்து வாங்க செய்கிறது.

நல்ல மணம் மிகுந்த பர்ப்யூம், ரோஸ் மாய்ஸ்சரைசிங் ஹேண்ட் க்ரீம், அரோமா டிஃப்பியூசர், ஹேர் டிரையர், சிலிகான் பேக், U-வடிவ தலையணை, பிபி கிரீம், பேஸ்பால் தொப்பி, ஷோல்டர் பேக், வாசனை மெழுகுவர்த்திகள், வாட்டர் பாட்டில் என ஏராளமான பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
தங்களின் நிறுவனத்தை தொலை நோக்கு பார்வையுடன், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வர்த்தகத்தில் வெற்றி நடை போடும் கார்த்திகேயன், அனுசியா ஆகியோர் இன்று கொளத்தூரில் மற்றொரு கிளையை திறந்துள்ளனர். இவர்கள் மேலும்… மேலும் வெற்றி இலக்கை அடைந்து உயர்ந்த நிலைக்கு செல்ல வாடிக்கையாளர்கள் வாழ்த்துக்கின்றனர்.