டோக்கியோ: அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். நிகழ்ச்சியின் நடுவே, அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
2020 ஆம் ஆண்டில், கொரோனா தொற்றுநோய் வெடித்தபோது, இந்தியாவுடனான லடாக் எல்லைப் பகுதியில் ஏராளமான சீன வீரர்கள் குவிக்கப்பட்டனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்தியா தனது அண்டை நாடான சீனாவுடன் சுமுகமான உறவைப் பேண விரும்புகிறது.
ஆனால், இருதரப்பு ஒப்பந்தத்தையும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையும் சீனா மதித்து நடந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இந்தியாவும் சீனாவும் உலகின் மிகப்பெரிய நாடுகள். இந்நிலையில் இவ்விரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்ட விரிசல் உலக நாடுகளை பாதித்துள்ளது. இதனால் இந்தியா-சீனா இடையேயான பிரச்னையில் தலையிட உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பிரச்சினையில் உலக நாடுகள் தலையிட விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.