மும்பை: பிசிசிஐயின் 94-வது ஆண்டு பொதுக் கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் 45 வயதான மிதுன் மனாஸ் புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிசிசிஐயின் 37-வது தலைவர் மிதுன் மனாஸ். ரோஜர் பின்னி மற்றும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்குப் பிறகு பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற மூன்றாவது முதல் தர கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை மிதுன் மனாஸ் பெற்றுள்ளார்.
மிதுன் மனாஸ் 1547 முதல் தர போட்டிகள், 130 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 55 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஜம்மு & காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் மோசமான நிர்வாகம் காரணமாக அதன் விவகாரங்களை நிர்வகிக்க பிசிசிஐ அமைத்த மூன்று பேர் கொண்ட இடைக்கால குழுவின் இயக்குநராகவும் மிதுன் மனாஸ் பணியாற்றியுள்ளார்.

தேவஜித் சைகியா மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தலைவர் அருண் துமல் ஆகியோர் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவர் ரகுராம் பத் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மூத்த நிர்வாகி ராஜீவ் சுக்லா துணைத் தலைவராகத் தொடர்கிறார்.
அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய அணியின் தேர்வுக் குழுவில் ஆர்.பி. சிங் மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜூனியர் தேர்வுக் குழுவில் தமிழ்நாட்டின் எஸ். சரத் பெயரிடப்பட்டுள்ளார்.