ஜெய்ப்பூர்: மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னைக்கு காங்கிரஸ்தான் காரணம் என மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ‘ஓராண்டு ஆட்சி – சிறந்த வளர்ச்சி’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது, எரிசக்தி, சாலைகள், ரயில்வே மற்றும் குடிநீர் தொடர்பான ரூ.46,400 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் பிரதமர் மோடி மேலும் பேசுகையில், ”விவசாயிகளின் நலன் குறித்து அதிகம் பேசும் காங்கிரஸ், விவசாயிகளுக்கு எதுவும் செய்யாமல் மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது.
கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்தில் ஏற்பட்ட தாமதம் காங்கிரஸின் நோக்கத்திற்கு நேரடி சான்றாகும். பேச்சுவார்த்தையை ஊக்குவிப்பதே பாஜகவின் கொள்கை. மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்னையை வளர்ப்பதே காங்கிரசின் கொள்கை. “பாஜகவின் கொள்கை மோதல் அல்ல, உரையாடல். பாஜக ஒத்துழைப்பை நம்புகிறது. எதிர்க்கட்சி அல்ல. இடையூறு செய்வதில் பாஜக நம்பிக்கை இல்லை. தீர்வுகளை நம்புகிறது” என்று அவர் கூறினார்.