புது டெல்லி: நவம்பர் 26, 2008 அன்று, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பை ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களைத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 10 பயங்கரவாதிகளில் 9 பேர் இறந்தனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் தூக்கிலிடப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி தஹாவூர் ராணா கடந்த மாதம் அமெரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்டார். அவர் தேசிய புலனாய்வு அமைப்பால் (NIA) விசாரிக்கப்படுகிறார். சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தர்ஜித் சிங் ஏப்ரல் 28 அன்று ராணாவின் என்ஐஏ காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்தார். இந்த சூழ்நிலையில், ராணாவின் குரல் மற்றும் கையெழுத்து மாதிரிகளை சேகரிக்க என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்திடம் அனுமதி கோரியது. நீதிபதி ஏப்ரல் 30 அன்று அனுமதி வழங்கினார்.