மும்பை: ஏப்ரல் 2020-ல், ஒரு பெண் தனது மைத்துனர் மீது புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், “எனக்கும் எனது மைத்துனருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் போது அவர் என்னைக் கடித்தார். ஆபத்தான ஆயுதம் மூலம் அவர் எனக்கு தீங்கு விளைவித்தார். இது தொடர்பாக, மைத்துனர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 324 (ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி காயப்படுத்துதல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை பம்பாய் உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் விசாரித்து சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் உத்தரவில், “மனித பற்களை கடுமையான காயத்தை ஏற்படுத்தும் ஆபத்தான ஆயுதமாக கருத முடியாது. மரணம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தக்கூடிய கருவியால் காயம் ஏற்பட்டால் மட்டுமே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 324-ன் கீழ் தண்டிக்கப்படும்” என்று கூறியுள்ளது.