மும்பை: உயர்கல்விக்காக தனது மகனை வெளிநாட்டிற்கு அனுப்பிய கைதிக்கு பரோல் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் விவேக் ஸ்ரீவத்சவ். 2012ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. தற்போது சிறையில் உள்ளார். இந்நிலையில், பரோல் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பார்தி டாங்ரே, மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன், கடந்த 9ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “குடும்பத்தினர் அல்லது நெருங்கிய உறவினர் மரணம் போன்ற அவசர விஷயங்களுக்காக மட்டுமே கைதிக்கு பரோல் வழங்க முடியும். ”மகனை வெளிநாடு செல்ல அனுப்பி, பணம் ஏற்பாடு செய்ததாக கூறி, பரோல் வழங்க முடியாது.
விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், “ஒரு கைதியை சோகமான நிகழ்வுகளுக்கு செல்ல பரோல் செய்யும்போது, மகிழ்ச்சியான விஷயங்களுக்கு செல்ல ஏன் பரோல் கொடுக்கக்கூடாது. விவேக் ஸ்ரீவத்சவ் பரோலில் செல்ல அனுமதிக்கிறோம்.
குற்றவாளிகள் வெளியுலகத்துடன் தொடர்பில் இருக்கவும், அவர்களது குடும்ப விவகாரங்களுக்கு பணம் ஏற்பாடு செய்யவும், சிறையில் இருந்தபோதிலும் குற்றவாளியின் மகனாக, கணவனாக, தந்தையாக அல்லது சகோதரனாகத் தொடர்வது போல் குறுகிய நிபந்தனை பரோலில் செல்ல அனுமதிக்கிறோம். மனிதாபிமான அணுகுமுறையில் குற்றவாளிகளுக்கு இந்த நிபந்தனை பரோலை நாங்கள் மதிக்கிறோம்.
சோகம் என்பது ஒரு உணர்ச்சி, அது போல் மகிழ்ச்சியும் ஒரு உணர்ச்சி. துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளவே பரோல் வழங்கப்பட்டால், மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களிலோ, மகிழ்ச்சியான தருணங்களிலோ கைதி பரோலில் செல்ல அனுமதிப்பது ஏன்?’’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விவேக் ஸ்ரீவத்சவ் 10 நாட்கள் நிபந்தனையுடன் பரோலில் செல்ல நீதிமன்றம் உத்தரவு.