வெளிநாட்டில் படித்து, முயற்சி தோல்வியடைந்தபின் தாய்நாட்டில் வெற்றி கண்டவர் நயன் ஷா. குஜராத்தின் அகமதாபாத்தில் பிறந்த அவர், வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் ஆஸ்திரேலியாவில் மேல்படிப்பு செய்து பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றினார். 2002-இல் இந்தியாவுக்குத் திரும்பி தொழில்முனைவில் கால் பதித்தார்.
முதல் முயற்சியாக கார்ன்ட் எனர்ஜி பானத்தை அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் நன்றாக போனாலும் வணிக வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த தோல்வி அவருக்கு குடிநீர் துறையில் சாத்தியங்களை காட்டியது. 2005-இல் கிளியர் பிரீமியம் வாட்டர் நிறுவத்தைத் தொடங்கினார். தரமான, பாதுகாப்பான பாட்டில் தண்ணீர் வழங்கும் நோக்கில் நிறுவனம் வளர்ந்தது.
இன்று நாட்டில் 45 உற்பத்தி மையங்கள், 1.25 லட்சம் விற்பனை நிலையங்களில் தயாரிப்புகள் உள்ளன. அவரது நிறுவனத்தின் மதிப்பு ரூ.449 கோடி. நிகர செல்வம் ரூ.351 கோடி. வெற்றியின் அடிப்படை அவரது முயற்சி, தோல்வியில் இருந்து கற்றல், சந்தை தேவை புரிதல்.
நயன் ஷா தாய்நாட்டில் வாய்ப்புகளை உருவாக்கியதோடு, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கினார். இந்திய பாட்டில் தண்ணீர் சந்தையில் முன்னணி நிலையை பிடித்துள்ளார். அவரது பயணம், வெளிநாட்டில் படித்தும், நாட்டிற்குத் திரும்பி சாதிக்கலாம் என்பதற்கான சான்று.
தோல்வியை பயப்படாமல், அதனை பாடமாகக் கொண்டு முன்னேறினால் வெற்றி நிச்சயம் என்பதையும் அவர் நிரூபித்துள்ளார். அவரின் கதை, இளைஞர்களுக்கு ஒரு உந்துதல் மற்றும் வணிக உலகில் ஒரு வழிகாட்டியாகும்.