புதுடில்லி: இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பெரும் வளர்ச்சியை கொண்டு வந்த யு.பி.ஐ. (UPI) நடைமுறையில், புதிய தொழில்நுட்ப மாற்றம் ஒன்று விரைவில் அமலுக்கு வர உள்ளது. இனி பணம் அனுப்பும்போது, ரகசிய எண் (PIN) வேண்டாமென, அதற்குப் பதிலாக கைரேகை (biometric) மற்றும் முக அடையாளம் (facial recognition) பயன்படுத்தும் வசதி அறிமுகமாகிறது.
இந்த திட்டத்தை, யு.பி.ஐ.யை செயல்படுத்தும் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அறிவித்துள்ளது. தற்போது, யு.பி.ஐ. செயலிகளான ‘ஜிபே’, ‘போன்பே’ போன்றவற்றில் ஒரு நபருக்கு பணம் அனுப்பும் போது, நான்கு அல்லது ஆறு இலக்க PIN எண்ணை உள்ளிட வேண்டும். இந்த PIN நமது வங்கி கணக்கை பாதுகாக்கும் முக்கிய அம்சமாக இருந்தது.

இந்நிலையில், PIN-ஐ மாற்றியாக கைரேகை அல்லது முக அடையாளம் பயன்படுத்தும் புதிய அம்சம், பாதுகாப்பையும் வசதியையும் ஒருசேர வழங்கும். அதாவது, யாராவது உங்கள் கைரேகையோ முகத்தையோ தவிர, உங்கள் அங்கீகாரமின்றி பணம் அனுப்ப இயலாது. இது PIN தொலைந்துவிடும் அபாயத்தையும் குறைக்கும்.
இந்த புதிய அம்சம் வரும் நாட்களில் அனைத்து முக்கிய யு.பி.ஐ. செயலிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. மாதந்தோறும் யு.பி.ஐ. வாயிலாக நடைபெறும் ₹20 லட்சம் கோடியே மேலான பரிவர்த்தனைகளுக்கு இது பெரும் பாதுகாப்பு அணுகுமுறையாக அமையும்.