புது டெல்லி: கடந்த மாதம் 6-ம் தேதி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மாநிலங்களவை கூடியபோது, காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வியின் இருக்கையில் 500 ரூபாய் நோட்டுகள் காணப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இந்த விவகாரம் குறித்து நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், “ஒரு மாதத்திற்கு முன்பு, மாநிலங்களவையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 500 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால் இதுவரை எந்த எம்.பி.யும் அந்தப் பணத்தை உரிமை கோரவில்லை. ஒருவேளை யாராவது அந்தப் பணத்தை தேவைக்காகக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அந்த ரூபாய் நோட்டு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அது அவர்களுடையது அல்ல என்று எல்லோரும் கூறுகிறார்கள். இது மிகவும் வேதனையானது. இது மிகவும் தீவிரமான பிரச்சினை. இது நமது நேர்மை மற்றும் மதிப்புகளுக்கு ஒரு கூட்டு சவால்.”