அகமதாபாத்: கிரிமியன் காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் (CCHF) பொதுவாக காங்கோ காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. ஜாம்நகரை சேர்ந்த கால்நடை வளர்ப்பு தொழிலாளி மோகன் பாய் கடந்த 21-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புனேவில் உள்ள ஆய்வகத்தில் அவரது ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் காங்கோ காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, இறந்தவரின் வீட்டின் சுற்றுப்புறங்களில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த வகை வைரஸ் விலங்குகளிடமிருந்து நேரடியாகவோ அல்லது சில வகையான உண்ணிகள் மூலமாகவோ மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், உடல்வலி, தலைசுற்றல், தலைவலி, கண் எரிச்சல், தூக்கமின்மை, மனச்சோர்வு, வயிற்றுவலி, வாய், தொண்டை, தோலில் வெடிப்பு போன்றவை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத இந்த நோயின் அறிகுறிகள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.