
புதுடில்லி: பிரபல இணைய பாதுகாப்பு நிறுவனம் ‘காஸ்பர்ஸ்கை’ வெளியிட்ட அறிக்கையின்படி, ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடும் 84,000க்கும் மேற்பட்ட இந்திய பயனர்களின் கணக்கு விபரங்கள் இணையத்தில் கசியியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஆன்லைன் விளையாட்டு வர்த்தகம் அதிக அளவில் நடைபெறும் பகுதிகளில் இந்தியா முதன்மை இடம் பெறுகிறது. இந்த சூழலில், 2024 மட்டும் உலகளவில் 1.1 கோடி பயனர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் மட்டும் 84,262 பயனர்களின் தகவல்கள் இணையத்தில் கசியுள்ளன. இதேபோல் தாய்லாந்தில் 1.62 லட்சம் கணக்குகள், பிலிப்பைன்சில் 99,273 கணக்குகள், வியட்நாமில் 87,969 கணக்குகள், இந்தோனேஷியாவில் 69,909 கணக்குகளின் விவரங்கள் வெளிப்பட்டுள்ளன.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஆன்லைன் விளையாட்டு பயனர்கள் 180 கோடியை தாண்டியுள்ளனர். பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ள காஸ்பர்ஸ்கை நிறுவனம், பயனர்கள் கடவுச்சொற்கள், ‘இமெயில்’ மற்றும் கட்டண விவரங்களை மீட்டமைக்க அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறான தகவல் கசியல்கள் மூலம், ஆன்லைன் மோசடி, தனிப்பட்ட தகவல் திருட்டு, மற்றும் விளையாட்டு கணக்குகளில் நிதி நட்டம் ஏற்படக்கூடிய அபாயங்கள் அதிகம்.
இது போன்ற சம்பவங்கள், ஆன்லைன் பாதுகாப்பின் மீது வலியுறுத்தல் தேவை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கின்றன. நவீன பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாத கணக்குகள் குறித்த இச்செய்தி பயனர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இந்திய அரசும், தனியார் இணைய நிறுவனங்களும் பயனர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.