புதுடில்லி: மாஸ்டர் கார்டு நிறுவனம் திட்டம்… கைரேகை, ஃபேஸ் ஸ்கேன் மூலம் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க மாஸ்டர் கார்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.
வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு விவரங்கள் மோசடி பேர்வழிகள் வசம் சிக்காமல் இருக்க, ஆன்லைன் பரிவர்த்தனையின் போது, கிரெடிட் கார்டு எண்களை பதிவிடுவதற்கு பதிலாக கைரேகை, ஃபேஸ் ஸ்கேன் மூலம் பண பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க மாஸ்டர் கார்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது, செல்போன் அல்லது இ-மெயிலுக்கு அனுப்பப்படும் ஒ.டி.பி. எண்களையும் ஹேக்கர்கள் திருடிவிடுவதால் வாடிக்கையாளர்கள் பணத்தை இழக்க நேரிடுகிறது. இதனால், வங்கிகளுடன் இணைந்து பையோமெட்ரிக் சரி பார்ப்பு முறையை அறிமுகப்படுத்த மாஸ்டர் கார்டு நிறுவனம் முடிவெடித்துள்ளது.