புதுடில்லி: வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா இன்று (ஏப்ரல் 02) மதியம் 12:00 மணிக்கு லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன, இதனால் சபையில் விறுவிறுப்பான விவாதம் நடைபெற்று வருகிறது.

முஸ்லிம்கள் சமூக நலத்திட்டங்களுக்காக சொத்துக்களை எழுதி வைக்கும் வக்ப் வாரியம், இதற்கென உருவாக்கப்பட்ட வக்ப் வாரிய சட்டப்படி நிர்வகிக்கப்படுகிறது. மத்திய அரசு இந்த சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தங்களின் கீழ், வக்ப் வாரிய சொத்துக்களை நிர்வகிக்கும் கவுன்சிலில் பெண்களை உறுப்பினர்களாக சேர்ப்பது, வக்ப் சொத்துக்களின் பிரச்னைகளில் மாவட்ட கலெக்டரே இறுதி முடிவை எடுப்பது போன்ற முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பார்லி மற்றும் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதன் பின்னர், மசோதா கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பா.ஜ., எம்.பி., ஜெகதாம்பிகா பால் கூட்டுக்குழுவிற்கு தலைமை வகித்தார். முஸ்லிம்கள் தரப்பில் ஆலோசனைகள் நடத்தி விரைவில் பணிகளை முடித்தார்.
இன்று (ஏப்ரல் 02) மசோதா மீதான விவாதம் தொடர்ந்துவரும் நிலையில், மத்திய அரசின் நோக்கம், வக்ப் வாரிய சொத்துக்களின் மேலாண்மையில் மேலும் சீரான நடைமுறை உருவாக்குவது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.