டெல்லி: நிமெசலைட் என்ற வலி நிவாரணி மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் சட்டவிரோத விற்பனையை கண்காணிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நிமெசலைட் கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு பயன்படுத்தப்படுகிறது. இது வலி நிவாரணியாக செயல்பட்டாலும், இந்த மருந்துக்கு பல பக்க விளைவுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தலைவலி, வயிற்றுப்போக்கு, பார்வைக் குறைபாடு, கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த மருந்தை மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த தடை கோரி வழக்கு தொடரப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் நிமெசலைட் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், அதன் உற்பத்தி மற்றும் விற்பனை சட்டவிரோதமாக நடைபெறாமல் இருக்க அனைத்து மாநிலங்களும் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.