புதுடில்லி: எங்கள் விமானங்கள் பாதுகாப்பானவை என்று ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
அண்மையில் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான தங்களின் போயிங் 787 டிரீம்லைனர் மாடல் விமானங்கள் பாதுகாப்பானவை தான் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குழு முன்பாக ஏர் இந்தியாவின் பிரதிநிதிகள் இதை தெரிவித்தனர். இந்த வகை விமானங்கள் ஆயிரக்கணக்கான முறை பாதுகாப்பான சேவை அளித்துள்ளதாக தெரிவித்த அவர்கள், அலுவல்பூர்வமான விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.