பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் இந்திய அரசு முக்கிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாட்டை விட்டு திரும்ப வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியர் பயணிகள் பாகிஸ்தானுக்கு செல்லவே கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசு அவசர அமைச்சரவை கூட்டம் நடத்தி இந்த முடிவுகளை எடுத்தது. ஏற்கனவே பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல், இந்தியாவுக்குள் பாதுகாப்பு சூழலை கவலையுடன் பார்க்க வைத்துள்ளது. இதனால், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, திருப்பதியில் பாதுகாப்பு ஒத்திகைகள் நடக்கின்றன.
பாகிஸ்தான் நடவடிக்கைகள் குறித்து தமிழகத்திலும் அரசு அலட்சியமின்றி செயல்படுகிறது.இஸ்ரேல், இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கும் நிலைபாட்டையும் வெளிப்படையாகக் கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் சிலர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் உள்துறை அதிக கவனத்துடன் செயல்படுகிறது.பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சிறைபிடித்த விவகாரமும் சிக்கலை உருவாக்கியுள்ளது.