ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் அடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய பாதுகாப்பு படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டியதாக சிறைபிடித்துள்ளனர். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், பாகிஸ்தான் அவரை விடுவிக்க மறுத்து வருகிறது. இதனால், இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போர்கொடுத்த நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது தாக்குதலை தொடர்ந்து, குப்வாரா மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் துப்பாக்கிச்சூட்டுகள் நடைபெற்றன. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அதற்கேற்ப பதிலடி கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல் மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில், இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.