வாஷிங்டனில் பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீர், சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால் அதனை 10 ஏவுகணைகளால் அழிப்போம் என்று எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான தொடர்பு தீவிரமான நிலையில், இந்தியா சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

அமெரிக்காவில் நடந்த சில முக்கிய ராணுவ விழாக்களில் பாகிஸ்தான் ராணுவ தளபதி கலந்துகொண்டார். அவர் இந்தியாவிடமிருந்து அச்சுறுத்தல் வந்தால், உலகின் பாதியை அழித்துவிடுவோம் என்று அச்சுறுத்தியுள்ளார். இது சர்வதேச தரப்புகளில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இந்தியா மீது வீசியது, ஆனால் அவற்றில் ஒரு ஏவுகணை கூட இந்திய நிலைகளைச் சேதப்படுத்தவில்லை. இந்த மிரட்டல் பலவகை கேள்விகளை எழுப்பி வருகிறது.